Thursday 31 December 2009

NEW YEAR WISHES

Wish you all a Happy, Prosperous and Musical New Year. May this New Year bring happiness, Peace and Cheer to all of us.

Tuesday 29 December 2009

Concert Review - Dina Malar


தேனாய் இனித்த நந்தினி வயலினிசை

நந்தி பைன் ஆர்ட்சின் ஆதரவில் நடைபெற்ற வயலின் சகோதரிகளில் நந்தினியின் வயலினிசை கச்சேரி நடந்தது. பக்கபலமாக மிருதங்கத்தில் ஸ்ரீதரன், தவிலில் திருவல்லிக்கேணி சாந்தகுமார் அடங்கிய அருமையான கூட்டணியில் தேனாய் தித்தித்தது. "வாரணமுகவா' கோடீஸ்வரய்யரின் ஹம்ஸத்வனி ராக கீர்த்தனையில் சிறிய ஆலாபனையில் தொடங்கி, நல்ல நேர்த்தியாக கொடுத்தார். அடுத்து, பண்டு ரீதிகோலு தியாகய்யரின் கீர்த்தனை ஹம்ஸநாத ராகத்தில் அழகு கொஞ்சும் பழமை மாறாமல் கொடுத்தார். அடுத்து, வாசஸ்பதி ராக ஆலாபனை மிகவும் வாத்ஸல்யமாக இருந்தது.

சிவனின் பாடலான பராத் பராவை கொடுத்தது, கற்பனை ஸ்வரம் நல்ல வளம். பாடிக்கொண்டிருக்கும் போது இப்பாட்டை பிரபலப் படுத்திய டி.கே.பட்டம் மாள் நினைவில் வந்து போனார். அடுத்து, திவிஜாவந்தி ராக ஆலாபனை கொடுத்து, தீட்சிதரின் அகிலாண் டேஸ்வரி கிருதியை பக்தி ரசம் ததும்ப கொடுத்தார். கண்மூடி கேட்டால், அகிலாண்டேஸ்வரி திவ்ய தரிசனம் கிடைத்துவிடும். அடுத்து, மிக விறுவிறுப்பாக "நின்னுவினா' நவரச கன்னடா ராகத்தில் சிட்டை ஸ்வரத்தில் அமர்க்களமாக வாசித்தார். தவிலும் மிருதங்கமும் இணைந்து நல்ல விதமாய் கொடுத்தார்.

இம்மாதிரி, கீர்த்தனைகள் வாசிக்கும் பொழுது சிறியவர்களை விட பெரியவர்கள் தான் சின்னக் குழந்தை போல் ரசித்து கேட்கின்றனர். அடுத்து, பிரதான ராகமாக, மோகனம் எடுத்துக் கொண்டு, ராக ஆலாபனை நல்ல விஸ்தாரமாக அமைந் தது. தவிலில் சாந்தகுமாரும் மிருதங்க ஸ்ரீதரனும் மிக அழகாக தங்கள் சுற்றுக்களை கொடுத்தனர். குன்னக் குடிக்கு பிறகு வயலினிக்கு தவில் பக்கவாத்தியமாக அதிகம், இச்சகோதரிகள் வைத்துக் கொள்கின்றனர் என்பது சிறப்பான விஷயம்.

அடுத்து "குறை ஒன்றும் இல்லை' ராஜாஜியின் வைர வரிகள் பாடலை கொடுத்து, என்றுமே எதற்கும் குறைவில்லை என்று சொல்லும்படி இருந்தது லிங்காஷ்டகத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தது. ரசிகர்களின் பலத்த கரகோஷத்தில் சந்நிதியில் சங்கீதம் சௌக்யமாக இருந்தது.

(This is a review of my concert at Nandi Fine Arts on 20.12.2009, Chennai that appeared in the Dinamalar - reviewed by Rasigapriya. Click here for the original review.